தமிழ்நாடு

தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்க்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

DIN

அவிநாசி: தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருப்பூர், அவிநாசி விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின்திறன், மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர் மின் பகிர்மான வட்டம், மத்திய திறனூக்கச் செயலகம் நடைபெற்ற முகாமிற்கு திருப்பூர் கூடுதல் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் பி.பரஞ்சோதி, டி.சுமதி, ராஜகுமாரி, ராமச்சந்திரன், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் முரளிதரன் (மாவட்ட எரிசக்தி முகமை ஆட்சியர் அலுவலகம்), மேற்பார்வை பொறியாளர் (ஒய்வு) ஆர்.ராஜாமணி ஆகியோர் விளக்கவுரையற்றினர். 

இதில் விவசாயிகள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிர்த்து, மின் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் சூரிய மின்சக்தி திட்டம், மானியத்தில் மின் மோட்டார் வாங்கும் திட்டம், தட்கோ திட்டத்தில் மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மின்மோட்டாரை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையின்றி மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின்வாரியத்திற்கு மின் இழப்பு ஏற்படுகின்றது. மேலும் அதிக விபத்துகள் ஏற்படுத்தும் சில்க் வயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இலவச மின்சாரம் அறிக்கையில் உள்ளபடி தொடரும் என்பது உள்ளிட்ட விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 

இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், மின் விளக்குகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் திருப்பூர் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT