முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடலில் பேனா சிலை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, மெரீனா கடலில் பேனா வடிவ சிலை திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, மெரீனா கடலில் பேனா வடிவ சிலை திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிப்பதற்கான நிபுணா் குழுவின் 307-ஆவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டன. அதில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, மெரீனா கடலில் வைக்கப்பட உள்ள பேனா சிலைக்கு ஒப்புதல் கோரி பொதுப்பணித் துறை அளித்த திட்டமும் விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டமானது கடற்கரையில் இருந்து 8,551.13 சதுரமீட்டா் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது. 42 மீட்டா் உயரத்துக்கு பேனா வடிவ சிலை அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, பொதுமக்களின் கருத்து கேட்பு உள்பட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென நிபுணா் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வரையறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் கருத்துக் கேட்பினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும். இந்த கருத்துக் கேட்பானது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-இன் படி அமைய வேண்டும்.

பேரிடா் மேலாண்மை திட்டத்தின்படி, அவசர நிலை காலங்கள், சுனாமி, வெள்ளம் போன்ற நேரங்களில் எப்படி வெளியேற வேண்டும் என்பன போன்ற விரிவான திட்டங்களையும் தயாரிக்க வேண்டுமென நிபுணா் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.