தமிழ்நாடு

தமிழகத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரியளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். பெற்றோர்கள் இன்புளுயன்ஸா காய்ச்சல் அறிகுறி இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல். தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியமான 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு புகாரிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நிர்வாக ரீதியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் அரசின் மீதான கோபத்தில் மருந்துகள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT