தமிழ்நாடு

பெரியாருக்கு இபிஎஸ் மரியாதை... பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றது ஏன்? 

பெரியார் சிலையின் கீழ் பெரியார் படத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியதும், அவரது ஆதரவாளர்கள் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். 

DIN

பெரியார் சிலையின் கீழ் பெரியார் படத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியதும், அவரது தரப்பினர் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். 

பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. 

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசிய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை தந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியதை அடுத்து சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்த வருவதை அறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். 

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் வர உள்ள நிலையில் அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படம் அவருடைய சிலை அருகே வைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT