தமிழ்நாடு

சேலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா: அமைச்சர் பொன்முடி மரியாதை

பெரியார் பிறந்த நாளை யொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

DIN

பெரியார் பிறந்த நாளை யொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பெரியாரின் 144 வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசின் சார்பிலும் இந்த விழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து சமூக நீதிக்கான உறுதி மொழியினை வாசிக்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரும்ப வாசித்து சமத்துவமான சமுதாயம், அனைவருக்கும் சமமான சமூக நீதி, பெண்களுக்கான முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்க உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT