தமிழ்நாடு

ஆண்டாள் கோயில் யானை தாக்கப்பட்ட விவகாரம்: அசாம் வன அதிகாரிகள் ஆய்வு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விடியோ  பரவிய நிலையில் அசாம் வன அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயியிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம்  ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என்ற  கோயில் யானை மண்டபதில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில், யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்துவிட்டு வீதி உலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து  செல்லும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து யானை பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து விடியோ வதந்தி பரவுகிறது.

இந்நிலையில், தற்போது 15 லட்ச ரூபாய் செலவில் யானைக்காக கிருஷ்ணன் கோவிலில் நீச்சல் குளம் மற்றும்  நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து யானை தாக்கப்படுவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விடியோ வைரலான நிலையில் கடந்த 5ஆம் தேதி தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து யானை தாக்கப்பட்டதா தற்போது யானை நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. 

இந்நிலையில் யானை அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டதால் அசாமை சேர்ந்த வன பாதுகாவலர் அசாம் உயர் நீதிமன்றத்தில் யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கு கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து அசாம் வன பாதுகாவலர் ஹித்தேஷ்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வன உயிரின பேராசிரியர் பத்மஸ்ரீ கே. கே. ஷர்மா, ரூப்ஜித்காகாதீ, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணைவன பாதுகாவலர் டாக்டர் நாகநாதன், டாக்டர் சுகுமார், மற்றும்  அந்தோனி ரூபின், உள்ளிட்ட சிறப்பு குழுவினர் யானையை ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சியில்,ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர் கீதா, வருவாய் ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT