தமிழ்நாடு

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

DIN

அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக உள்கட்சிட்ஜ் தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அகட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி சென்னை 
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, கட்சியின் உள்விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

எனினும் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும் கே.சி.பழனிசாமி கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT