முகப்பு
தமிழ்நாடு

செப். 22, 23ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா!

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரு நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
பகிர்:

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரு நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வரவிருக்கிறார். வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை வரும் ஜெ.பி.நட்டா, செப். 22 மற்றும் 23ல் காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

பின்னர் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

ஜெ.பி.நட்டா வருகையையொட்டி தமிழக பாஜகவினர் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →