தமிழ்நாடு

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

DIN

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

மத்திய உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித் ஷாவிடம் கூறினேன் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் குறித்து கேள்விகள் எழுப்பியதற்கு, நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல், மன்னிக்கவும், சாரி என்றே பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT