தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிமுறைகளை மீறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT