ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
ஆயுதபூஜை விடுமுறைகால சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை இன்று (அக்.21) அறிவித்துள்ளார்.
ஆயுதபூஜை விடுமுறைகால சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை இன்று (அக்.21) அறிவித்துள்ளார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
படிக்க | அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது!
Advertisement
Advertisement
இதேபோன்று, கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தவிர்த்து பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.