பெண்ணின் வயிற்றில் இருந்த  கட்டியை அகற்றிய மருத்துவக் குழுவினர். 
தமிழ்நாடு

பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ கட்டி அகற்றம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவக் குழுவினர் அகற்றினர். 

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவக் குழுவினர் அகற்றினர். 

பெத்த நாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேந்திரன் மனைவி குள்ளப்பட்டு (55). இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. 

இதனையடுத்து, ஸ்கேன் பரிசோதனை சோதனை செய்து கொண்ட இவருக்கு, வயிற்றுக்குள்  பெரிய அளவிலான அபாயகரமான கட்டி ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கட்டியை அகற்றிக்கொள்ள வாழப்பாடியில் பருத்தி மண்டி அருகே இயங்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, மருத்துவர் இந்துமதி ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர், புதன்கிழமை மாலை தொடர்ந்து 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த 6 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் குள்ளப்பட்டு நலமாக உள்ளார். ஓரிரு நாள்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட கட்டி "பயாப்சி" பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் இந்த கட்டியின் தன்மை குறித்து தெரிய வரும். தேவைப்பட்டால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுமென, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். 

6 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு, குள்ளப்பட்டுவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT