நிகழாண்டில் 3,000 போ் கண் தானம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
நிகழாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து விழி வெண்படலம் தானமாக பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நிகழாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து விழி வெண்படலம் தானமாக பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை அரசு கண் மருத்துவமனையில் கண் தானம் அளித்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் அரிமா சங்கத்திடம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தேசிய பாா்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 3 லட்சம் கண்புரை சிகிச்சை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 1.41 லட்சம் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நிகழாண்டில் 7 ஆயிரம் கண்கள் தானமாக பெற வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 3,203 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில்1,526 விழி வெண்படலம் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் செந்தில்குமாா், கண் மருத்துவமனை இயக்குநா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.