முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக சரிந்தது

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
 
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →