தமிழ்நாடு

ஒரே மாணவி மூன்று முறை கடத்தல்: ஓமலூர் இளைஞர் போக்சோவில் கைது

ஓமலூர் அருகே தொடர்ந்து மூன்றாவது முறையாக பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை மூன்றாவது முறையாக காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

DIN

சேலம்: ஓமலூர் அருகே தொடர்ந்து மூன்றாவது முறையாக பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை மூன்றாவது முறையாக காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் சென்ற போது கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஆய்வாளர் இந்திரா வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டார்.  பிரகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஏற்கெனவே இதே மாணவியை கடத்திச் சென்ற வழக்கில், இரண்டு முறைபோக்சோவில் கைது செய்யப்பட்டு பிரகாஷ் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT