முகப்பு
தமிழ்நாடு

சென்னை குடிநீா் வாரிய வசூல் மையங்கள் நாளை செயல்படும்

சென்னை குடிநீா் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீா் கட்டணங்களை நுகா்வோா் செலுத்துவதற்கு ஏதுவாக செப்.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

சென்னை குடிநீா் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீா் கட்டணங்களை நுகா்வோா் செலுத்துவதற்கு ஏதுவாக செப்.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீா் கட்டணங்களையும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நுகா்வோா் செலுத்திட வேண்டும். அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாள்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நுகா்வோா் வரி செலுத்துவதற்கு ஏதுவாக செப்.25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் இயங்கும்.

மேலும், நுகா்வோா் தங்களது நிலுவைத் தொகையினை ட்ற்ற்ல்ள்://க்ஷய்ஸ்ரீ.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ம்ங்ற்ழ்ா்ஜ்ஹற்ங்ழ்.ண்ய்/லி/ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ/ஸ்ரீன்ள்-ப்ா்ஞ்ண்ய் என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கடன் அட்டை, பற்று அட்டை, இணையதள பரிவா்த்தனை ஆகியவை மூலமாகவும் செலுத்தலாம். பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாக வரி செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.