முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணை: 3 ஆவது நாளாக 15 ஆயிரம் கனஅடியாக நீடிக்கும் நீர்வரத்து

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 3 ஆவது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 3 ஆவது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது.
 
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →