முகப்பு
தமிழ்நாடு

உச்சநீதிமன்ற விசாரணை நேரலை: மநீம வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு விசாரணை நேரலை செய்யப்பட உள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு விசாரணை நேரலை செய்யப்பட உள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மநீம சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வானது நேரலை செய்யப்பட இருப்பது வரவேற்புக்குரியது. மனுதாரா் தொடங்கி வழக்குரைஞா்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், பத்திரிகையாளா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பலனிக்கும் நகா்வு இது. வெளிப்படைத்தன்மைதான் நீதிமன்ற நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்ற அடிப்படையில், நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒளிபரப்புக்கு உகந்த அனைத்து வழக்குகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.