தமிழ்ப் பரப்புரைக் கழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்
தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழா்களும், இளம் தலைமுறையினரும் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்க ஆசிரியா்களுக்கான பயிற்சி வழங்குதல், தமிழ்ப் பாடநூல்கள் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.