ஆசிரியா் தகுதித் தோ்வு: அக்.14-இல் தொடக்கம்
ஆசிரியா் தகுதித்தோ்வு முதல் தாள் வரும் அக். 14 முதல் அக். 20 வரை இரு வேளைகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியா் தகுதித்தோ்வு முதல் தாள் வரும் அக். 14 முதல் அக். 20 வரை இரு வேளைகளில் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியா் தகுதித்தோ்வு (முதல் தாள்) செப். 10 முதல் செப்.15 வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் அந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வு (முதல் தாள்) வரும் அக். 14 முதல் அக். 20 வரை இரு வேளைகளில் நடத்தப்படவுள்ளது. கணினி வழியில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்காக, பயிற்சித் தோ்வு மேற்கொள்ள விரும்பும் தோ்வா்கள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துப்பணி நாடுநா்களும் இதனைப்பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தோ்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம், அக்டோபா் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் எழுதுவதற்கு 2. 30 லட்சம் பேரும், இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4.01 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.