கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு அக்.14-ல் தொடக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- 1 ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?

யூனியன் பிரதேசத்திற்கு நிவாரண தொகுப்பு அறிவிக்குமாறு மெஹபூபா வலியுறுத்தல்!

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்பு ஆய்வின்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

SCROLL FOR NEXT