தமிழ்நாடு

திருவையாறு: மஹாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் தர்ப்பணம்

DIN

தஞ்சாவூரில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர். 

மாதம் தோறும் வரும் அமாவசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி, மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிப்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர்.  தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து  காவிரிக் கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். இதனையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT