தமிழ்நாடு

மஹாளய அமாவாசை: திருவரங்கத்தில் புனித நீராடி தர்ப்பணம்

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையையொட்டி திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

DIN

புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையையொட்டி திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில், நதிக்கரையோரங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோரின் ஆன்மா அமைதி பெற வேண்டி எள், தண்ணீா் வைத்து தா்ப்பணம் அளித்தல், பிண்டம் வைத்து பரிகார வழிபாடுகள் செய்வது வழக்கம். 

ஆண்டுதோறும் மஹாளய அமாவாசையில் திருச்சி திருவரங்கத்தில் ஏராளமான பக்தா்கள் திரண்டு மூத்தோா் வழிபாடுகளில் ஈடுபடுவா். அந்தவகையில் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு  திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் கூடி புனித நீராடினர். 

காவிரியில் தண்ணீர் அதிக அளவு செல்வதால், ஆற்றில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT