முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.68 அடியாக குறைவு

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல், இன்று காலை  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,062 கன அடியிலிருந்து 11,368 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல், இன்று காலை  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,062 கன அடியிலிருந்து 11,368 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.38 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.68 அடியாக சரிந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →