ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு ஹிந்தி மொழியில் வெளியானதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்புக்கு பொருள் அறிய 'கூகுள்' உதவியை தேடனும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா? அல்லது ஹிந்தியாவுக்கானதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள் ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.