தமிழ்நாடு

ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பொரி தயாரிப்பு பணிகள் தீவிரம்

DIN

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பொரி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

ஆயுத பூஜை என்றாலே பொரி என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பொரி இல்லாத பூஜைகள் இல்லை என்ற அளவுக்கு ஆயுதபூஜையின் போது கடவுளுக்கு பொரி, கடலை மற்றும் பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் வருகின்ற 4 ஆம் தேதி ஆயுத பூஜை தொடங்க உள்ளது.

இதன் அடிப்படையில் சேலத்தில் பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலத்து பொரி சுவை மிக்கது என்பதால், இங்கு தயாரிக்கப்படும் பொரி சேலம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டமான தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு, கோவை மற்றும் பெங்களூர் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இதனால் சேலத்தில் ஆங்காங்கே பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடங்களில் பொரி உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய இயந்திரமாகிவிட்ட காலத்தில் இயந்திரங்களில் பொரி தயாரிப்பதை  தவிர்த்து சேலம் உற்பத்தியாளர்கள் பாரம்பரிய முறைப்படி பொரியை தயாரித்து வருவதால் இயற்கையாகவே சேலம் பொரிக்கு சுவை அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மாத கணக்கில் அதற்கான உரிய அரிசியை பதப்படுத்தி, துளையிடப்பட்ட அடுப்பில் நெல் உமிகளை விறகாக கொண்டு சூடேற்றி அந்த சூட்டில் பொரி தயாரிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT