முகப்பு
தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் டிஸ்சார்ஜ்

கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

ஓ.பன்னீா்செல்வத்துக்கு அண்மையில் சளி பிரச்னை இருந்தது. உடனே அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து, ஜூலை 15ஆம் தேதி சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினா் அவரை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வந்தனர். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இருநாள்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.