பல் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதாவின் 2ஆம் கட்ட விசாரணையில் 2 நாளில் 14 சாட்சியங்கள் சாட்சியளித்தனர்.
முதல்நாளில் 11 பேர், 2வது நாளில் 3 பேர் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் ஆஜராகி சாட்சியளித்தனர்.
அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்குள்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக வந்தவா்களை காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் பற்களைப் பிடுங்கி துன்புறுத்தியதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து தமிழக அரசால் உயா்நிலை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா விசாரணை நடத்தி வருகிறாா். அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.
2வது நாளாக இன்று 3 பேர் ஆஜராகி சாட்சியளித்தனர். முதல்நாளில் 11 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.