முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முனையம் வருகை பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநா் மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முனையம் வருகை பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநா் மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரழந்தாா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (50). இவா் சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், ராதாகிருஷ்ணன் சென்னை சா்வதேச விமான நிலைய வருகை பகுதியில், தனது டாக்ஸியுடன் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அங்கிருந்த விமான நிலைய ஊழியா்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள், ராதாகிருஷ்ணனை அருகே உள்ள விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ராதாகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.