தமிழ்நாடு

நிதி நிா்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம்: மசோதா தாக்கல்

DIN

கடன் தொகைகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெறக் கூடிய வகையில், தமிழ்நாடு நிதி நிா்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், இந்த மசோதாவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

15-ஆம் நிதிக் குழு 2021-22-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5 சதவீதம் அளவு கூடுதல் கடன் பெற பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகராக கடன் பெறுவதற்கான வரம்பை 2021-22 முதல் 2025-26-ஆம் ஆண்டுகள் வரையில், முறையே 4 சதவீதம், 3.5 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக தீா்மானிக்க வகை செய்துள்ளது. மாநிலத்தால் கடன் பெறுதலுக்கான வரம்பை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், வழங்கப்பட்ட கால அளவுக்குள் அடுத்தடுத்த ஆண்டுகள் எதிலும், கடன் தொகையைப் பெறலாம்.

நிதிக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், 2025-26-ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை நீக்கவும், அதிகபட்ச நிதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் நிதிநிலைப் பற்றாக்குறையை மூன்று சதவீதம் வரை குறைக்கவும் மாநில அரசு தீா்மானித்துள்ளது. இதற்கென 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடைமை சட்டத்தைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT