கோடை கால சிறப்பு ரயில்கள்: இன்று முதல் இயக்கம்
கோடை காலத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க ஏதுவாக, வெள்ளிக்கிழமை (ஏப்.21) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
கோடை காலத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க ஏதுவாக, வெள்ளிக்கிழமை (ஏப்.21) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஏப்.27 முதல் மே 25 வரை (வியாழக்கிழமை தோறும்) இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் எண்: 06021) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து எழும்பூருக்கு ஏப்.28 முதல் மே 26 வரை (வெள்ளிக்கிழமை தோறும்) பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06022) இயக்கப்படும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஏப்.26 முதல் மே 24 வரை (புதன்கிழமை தோறும்) இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06031) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு ஏப்.27 முதல் மே 25 வரை (வியாழக்கிழமை தோறும்) பகல் 1.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06032) இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
தாம்பரம்-நாகா்கோவில்:தாம்பரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.24 முதல் ஜூலை 3 வரை (திங்கள்கிழமை தோறும்) காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06011) இயக்கப்படவுள்ளது. மேலும், ஏப்.21 முதல் மே 26 வரை (வெள்ளிக்கிழமை தோறும்) இரவு 7.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஏப்.23 முதல் ஜூலை 2 வரை (ஞாயிற்றுக்கிழமை தோறும்) மாலை 4.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06012) இயக்கப்படவுள்ளது. மேலும், ஏப்.22 முதல் மே 27 வரை (சனிக்கிழமை தோறும்) மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06040) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படும்.
திருவனந்தபுரம்-எழும்பூா்: திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு மே 3 முதல் ஜூன் 28 வரை (புதன்கிழமை தோறும்) சிறப்பு ரயில் (எண்: 06044) இயக்கப்படவுள்ளது.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மே 4 முதல் ஜூன் 29 வரை (வியாழக்கிழமை தோறும்) சிறப்பு ரயில் (எண்: 06043) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் கோவை, திருப்பூா், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
தாம்பரம்-மங்களூா்: தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 வரை (செவ்வாய்கிழமை தோறும்) பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06031) இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக மங்களூரிலிருந்து தாம்பரத்துக்கு ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (புதன்கிழமை தோறும்) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, வழியாக இயக்கப்படும்.
கொச்சுவேலி-பெங்களூா்: கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து பெங்களூருக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 வரை (செவ்வாய்கிழமை தோறும் மாலை 6.05 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06083) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக பெங்களூரிலிருந்து கொச்சுவேலிக்கு ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (புதன்கிழமை தோறும்) பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06084) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.