கோப்புப்படம் 
தமிழ்நாடு

சரக்கு ரயில் தடம் புரண்டது: 4 பயணிகள் ரயில் ரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளுடன் பெங்களூரு சென்றபொது சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், தருமபுரி - பெங்களூரு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - பெங்களூரு ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி - ஓசூருக்கு பதிலாக ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் வழியே ஒரு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT