எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூட செல்லவில்லை
எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூடச் செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
தமிழ்நாடுஎதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூட செல்லவில்லை
எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூடச் செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூடச் செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பதிலுரை அளிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
மேலும் சிறப்பாக நடக்கும் சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு இடையே முதல்வரின் பதிலுரையை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவை நாகரிகம் கருதி முதல்வர் உணவு இடைவேளைக்குக் கூட செல்லாமல் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தார். ஆனால் அதிமுக அவையை விட்டு சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது' என்றார்.