பழனிவேல் தியாகராஜன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆடியோ போலியானது: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

DIN


தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது என 
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

பொது சமூகத்தில் வில்லன் போல் என்னை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பிடிஆர், என்னை இந்த அரசுக்கு எதிரான தனிப்பட்ட போராளி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.

இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான ஆடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. இந்த ஆடியோ முழுக்க பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளார். 

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது. ஆடியோவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

நானும் கவினும் உண்மையா லவ் பண்ணோம்! - Subhashini வெளியிட்ட பரபரப்பு வீடியோ

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!

வைரலாகும் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம்!

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

SCROLL FOR NEXT