முகப்பு
தமிழ்நாடு

நிதியமைச்சர் ஆடியோ சர்ச்சை: ஆளுநரிடம் பாஜக கோரிக்கை

தமிழக நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை தமிழக பாஜக குழுவினர் இன்று சந்தித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

தமிழக நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை தமிழக பாஜக குழுவினர் இன்று சந்தித்தனர். 

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர், என்னை இந்த அரசுக்கு எதிரான தனிப்பட்ட போராளி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். 

நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது. இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான ஆடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. இந்த ஆடியோ முழுக்க பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக பாஜக குழுவினர் இன்று சந்தித்தினர். அப்போது தமிழக நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடன் பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த சந்திப்பிற்கு பிறகு பாஜக குழுவினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆடியோவிலுள்ள குரல் யாருடையது என விசாரிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →