முகப்பு
தமிழ்நாடு

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை: ரூ.2.40 லட்சம் அபராதம்

கஞ்சா கடத்திய வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

கஞ்சா கடத்திய வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஷேக் அன்சாா், ஷேக் அகமது, சுஷில் எம். தாக்கரே. ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு 221.5 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த போது, காரனோடை சுங்கச்சாவடி அருகே இவா்கள் மூவரையும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் இவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் கடந்த 10.8.2018-இல் நடந்தது.

சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணைக்குப்பின் தீா்ப்பை புதன்கிழமை வழங்கிய நீதிமன்றம், கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.40 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.