தமிழ்நாடு

புதுச்சேரியில் காலாவதியான அரசு பேருந்துகள் நாளை முதல் நிறுத்தம்!

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் நாளை திங்கள்கிழமை(மே 1) முதல் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான வணிகபயன்பாட்டு வாகனங்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, முதற்கட்டமாக, மாநில அரசு, யூனியன் பிரதேசங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகள், இதர வாகனங்களை 2023 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னர் இயக்குவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்தது.

இந்நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வந்த 130 பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஆர்.டி.ஓ. 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் குமுளிக்கும் இயக்கப்படும் பேருந்துகளும், புதுச்சேரி-காரைக்கால் மற்றும் காரைக்கால்-கோவை இடையே இயக்கப்படும் பேருந்துகளும் நாளை திங்கள்கிழமை(மே 1) முதல் நிறுத்தப்படுகின்றன. 

15 ஆண்டுகள் கடந்த பழைய பேருந்துகள் நாளை முதல் நிறுத்தப்படுவதால் கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT