தமிழ்நாடு

பத்திரப் பதிவுத் துறை மூலம் ரூ.5,611 கோடி வருவாய்

DIN

தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறை மூலம் நிகழாண்டில் இதுவரை ரூ.5,611 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பத்திர பதிவுத் துறையின் வருவாய் வசூலில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.17 ஆயிரத்து 253 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் நிகழாண்டின் அதே காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டின் ஜூலை வரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 539.06 கோடியாகும். நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரையில் ரூ.5 ஆயிரத்து 611.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT