முகப்பு
தமிழ்நாடு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கொட்டாளம் தெருவை சேர்ந்தவர் விவசாயியான பாலையா(51), கடந்த 2017ஆம் ஆண்டில் இவர் இருவரை கொலை செய்தாராம்.

Updated On : 1 ஆகஸ்ட், 2023 at 6:14 PM
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கொட்டாளம் தெருவை சேர்ந்தவர் விவசாயியான பாலையா(51), கடந்த 2017ஆம் ஆண்டில் இவர் இருவரை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு திருநெல்வேல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிபதி இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அறிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாலையா உடல்நிலை பாதிப்படைந்தது. உடனடியாக அவரை சிறை காவலர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.