கொள்ளிடக்கரையில் திரண்ட மக்கள் 
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திரளான மக்கள் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் வியாழக்கிழமை குவிந்தனர்.

DIN

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் வியாழக்கிழமை குவிந்தனர்.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் புதன்கிழமை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அண்ணையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர். 

தாலி பிரித்து கோத்து காவிரி அண்ணைக்கு படைத்த பெண்கள்

ஓடும் நீரில் புதுமனத்தம்பதியினர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு தாலியை பிரித்துகோர்த்து காவிரி அண்ணைக்கு படைத்து அணிந்து கொண்டனர். 

திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

படவிளக்கம்-
படவிளக்கம்- தாலி பிரித்து கோர்த்து காவிரி அண்ணைக்கு படைத்த பெண்கள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT