தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு தமிழகரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 
தமிழ்நாடு

தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

DIN

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் தமிழகரசு சார்பில் அமைச்சர், மக்களவை உறுப்பினர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை மலர்வளையங்கள் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

சுதந்ததிர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18ம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.  அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தினையொட்டி மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கும்,  அதே போல்  தமிழகரசு சார்பில் ஈரோடு - பவானி பரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும்   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.  

மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் மாவட்ட  ஆட்சியர் எஸ்.கார்மேகம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி, சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி.ராஜா, வட்டாட்சியர் அறிவுடைநம்பி, பேரூராட்சித்தலைவர் மணிமொழிமுருகன், பேரூராட்சி செயல் அலுவலர் வ.சுலைமான்சேட், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.தங்கமுத்து, சங்ககிரி  திமுக ஒன்றியச்செயலர் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலர் கே.எம்.முருகன்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT