தமிழ்நாடு

கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டிலில் முதல் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள வீரர் குகேஷூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டிலில் முதல் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டிலில் முதல் முறையாக முதல் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள வீரர் குகேஷுக்கு எனது வாழ்த்துகள்.

உங்கள் அசாத்திய சாதனையில்  உங்களது திறமையும், உறுதியும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்மட்ட நிலைக்குத் தள்ளியது, 

உறுதியும்தான் மிக சிறந்த வீரராக உயர்த்தியுள்ளது. உங்களின் இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்தத்துடன், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT