கோப்புப் படம் 
தமிழ்நாடு

அதிமுக உறுப்பினராக 2.44 கோடி பேர் விண்ணப்பம்!

ஆக.17ஆம் தேதி மாலை 5 மணிவரை உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான கெடு நீட்டிக்கப்படுகிறது.

DIN


அதிமுகவில் உறுப்பினராக இணைவதற்கு 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் அதை புதுப்பித்துக்கொள்ள புதிய விண்ணப்பப்படிவங்கள் மே 4ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிவரை உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான கெடு நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT