தமிழ்நாடு

ரூ. 10 புகார் - டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மெஷின்கள்: டெண்டர் வெளியீடு

DIN

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. 

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு அதிக வருவாய் ஈட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 4500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலமாக ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. 

இதனியையே மதுபானக் கடைகளில் மது வாங்குவோரிடம் பாட்டில் விலையை விட கூடுதலாக ரூ. 10 வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமைச்சர் முத்துசாமியும் விளக்கமளித்தார். 

இந்நிலையில் கூடுதல் கட்டண வசூலைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தும்  ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

இதற்காக 4,810 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் வைப்பதற்கு மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

SCROLL FOR NEXT