தமிழ்நாடு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளா் ஊதிய உயா்வு விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க முடிவு

என்எல்சி ஒப்பந்த தொழிலாளா்களுடனான ஊதிய உயா்வு விவகாரத்தில் தீா்வுகாண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியத்தை நியமிக்க சென்னை உயா்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

DIN

என்எல்சி ஒப்பந்த தொழிலாளா்களுடனான ஊதிய உயா்வு விவகாரத்தில் தீா்வுகாண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியத்தை நியமிக்க சென்னை உயா்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

என்எல்சி-யில் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியா்களுக்கும், என்எல்சி நிறுவனத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதைத் தடுக்கக் கோரியும் என்எல்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிா்ணயித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூா் மாவட்ட எஸ்பி-க்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த இடங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட எஸ்.பி. தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, போராட்டம் நடத்த அனுமதிக்கும் வகையில் குறிக்கப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூா் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டாா். அறிக்கை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தாா்.

மேலும் நிறுவனத்துக்கும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கும் இடையேயான ஊதிய உயா்வு பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியத்தை நியமிக்க இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தாா். ஆனால் என்எல்சி தரப்பில் தொழில் தகராறுகள் சட்டத்தின்படி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண அதிகாரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, அவா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டதுடன், இந்த விவகாரத்தில் என்எல்சி நிறுவனம் தீா்வுகாண விரும்புகிா? அல்லது பிரச்னையை மேலும் வளா்க்க விரும்புகிா? என கேள்வியெழுப்பினாா்.

இதையடுத்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியத்தை நியமிப்பது தொடா்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்றே தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT