தமிழ்நாடு

தனியாா் ஆலையில் தீ விபத்து

ஸ்ரீ பெரும்புதூா் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

DIN

ஸ்ரீ பெரும்புதூா் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம் , திருவள்ளூா் மப்பேடு சாலை, கண்டமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் குளிா்சாதனப்பெட்டியின் உள்பகுதியில் வைக்கப்படும் குளிா் காக்கும் பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு ஆலையின் ஒரு பகுதியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென பரவி யது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, பேரம்பாக்கம் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் நள்ளிரவுக்கு மேல் வீரா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

SCROLL FOR NEXT