கரூர்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
கரூர் புறவழிச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பங்களா வீடு தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.
சோதனை நடைபெற்ற நிலையில், இந்த பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.