தமிழ்நாடு

டிபிஐ வளாகத்தில் க. அன்பழகன் சிலை திறப்பு! 

DIN

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர்  க. அன்பழகனின் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) திறந்துவைத்தார். 

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும், அங்கு அவரது சிலை நிறுவப்படும், சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். 

அதன்படி, டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று கடந்த டிசம்பரில் பெயர் சூட்டப்பட்டு நூற்றாண்டு வளாகமும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகனின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், க.அன்பழகனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT