தமிழ்நாடு

மாணவிகளிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது; பணியிடை நீக்கம்

DIN

சேலம்: மேட்டூர் அருகே மாணவிகளிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழை கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேட்டூர் அருகே உள்ள கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா(52). பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியரை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அமுக்கி விட வைத்தும் மசாஜ் செய்யவைத்தும் பல்வேறு தொல்லைகள் கொடுத்தும் வந்துள்ளார்.

பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர்கள்

இது தொடர்பாக தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பொதுமக்கள் தலைமை ஆசிரியரை கற்களாலும், செருப்பாலும் தாக்க முயற்சித்தனர். சிலர் அவர் மீது செருப்பை வீசினார்கள். இதனால் போலீசார் தலைமை ஆசிரியரை ஒரு அறையில் வைத்து தற்காத்தனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.

கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதிப்புக்குள்ளான சிறுமியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டா. 

முன்னதாக, அவரை கல்வித் துறை அதிகாரிகள் பணியிடை  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT