தமிழ்நாடு

காலமானார் கவிஞர் வாய்மைநாதன்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன்(86) இன்று (ஆக. 11) காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன்(86) இன்று (ஆக. 11) காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கவிஞர் வாய்மைநாதன். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர்.

இவர்,1986-ல் எழுதி வெளியான நேதாஜி காவியம் தமிழ்வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. இந்த காவியம் இந்தி மொழியில் வாங்க்காசிங்க் (1999) என்ற தலைப்பில் வெளியாகியது.

2008-ல் வெளியான கப்பலுக்கொரு  காவியம் (வ.உ.சி வரலாறு) அந்த ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுக்கு தேர்வானது.

மதுரை வீரன்(கவிதை நாடகம்), புதிய மனிதன் (சிறுகதைத் தொகுப்பு), தியாகி களப்பால் குப்பு(வாழ்க்கை வரலாறு), வெண்மணிக் காப்பியம், நாலி புதினம்  உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவருக்கு வேளாண்துறையில் பணியாற்றும் ஜீவானந்தம், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் முருகபாரதி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

 இவரது இறுதி சடங்குகள் வாய்மேடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.11) மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT